search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவாக 1000 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த பாக். வீரர்
    X

    விரைவாக 1000 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த பாக். வீரர்

    விரைவாக 1000 ரன்களை (21 இன்னிங்சில்) கடந்து பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சார்ட்ஸ், கெவின் பீட்டர்சன் சாதனையை சமன் செய்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்தது.

    அந்த அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் ஆசம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ரன்கள் சேர்த்தார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ரன்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ரன்கள் எடுத்ததன் மூலம் விரைவாக 1000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1980-ல் 22 போட்டியில் 21 இன்னிங்ஸ் மூலம் 1000 ரன்களை கடந்திருந்தார். அதன்பின் கெவின் பீட்டர்சன் 2006-ல் 21 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்திருந்தார்.



    பின்னர் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோநாதன் ட்ராட் 2011-ம் ஆண்டும், தென்ஆப்பிரிக்காவின் குயிண்டான் டி காக் 2014-ம் ஆண்டும் 21 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்திருந்தனர். தற்போது பாபர் ஆசம் 5-வது வீரராக 1000 ரன்களை விரைவாக எடுத்துள்ளார்.
    Next Story
    ×