என் மலர்
செய்திகள்

சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட்
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விராட் கோலி 122 ரன்னும், கேதர் ஜாதவ் 120 ரன்னும் சேர்த்தனர். விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27 சதங்கள் அடித்துள்ளார். இதில் 15 சதசங்கள் சேஸிங்கில் அடித்து அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
இந்நிலையில், சேஸிங் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் வெகுவாக பாராட்டியுள்ளார்.
விராட் கோலி சாதனை குறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்வதில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். உண்மையிலேயே இது மிகவும் சிறந்ததாக உள்ளது. சேஸிங்கில் 15 சதங்கள் அடித்துள்ளார் என்பதை அவரது சாதனை வெளிப்படுத்துகிறது.
விராட் கோலியுடன் உட்கார்ந்து கலந்துரையாட விரும்புகிறேன். ஆனால் இதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே அவருடைய ஆட்டத்தை கவனமாக பார்த்தால், அதற்கு பின் ஏராளமான விஷயங்கள் உள்ளன” என்றார்.
இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவிக்க ஜோ ரூட் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 78 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story