என் மலர்

  செய்திகள்

  டேவிஸ் கோப்பை அணியில் இருந்து சுமித் நாகல் நீக்கம்
  X

  டேவிஸ் கோப்பை அணியில் இருந்து சுமித் நாகல் நீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயிற்சியில் கலந்துகொள்ளாத இளம் டென்னிஸ் வீரர் சுமித் நாகல், இந்திய டேவிஸ் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்றிருந்தவர் சுமித் நாகல். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில், ஸ்பெயினுக்கு எதிராக போட்டி நடந்தபோது, ஒரு ஆட்டத்தில் மட்டும் சுமித் நாகல் விளையாடினார். அப்போது சுவாசப் பிரச்சினை காரணமாக 5-வது போட்டியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறியதால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

  இந்நிலையில் டேவிஸ் கோப்பை தொடரின் ஆசியா/ஓசியானியா குரூப்-1 பிரிவில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டிகள் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், இன்று சுமித் நாகல் பயிற்சிக்கு வரவில்லை. நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் இன்று பயிற்சிக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அகில இந்திய டென்னிஸ் சங்கம், சுமித் நாகலை டேவிஸ் கோப்பை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

  நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 5 வீரர்கள் கொண்ட அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் இன்று அறிவித்தது. அதில் சுமித் நாகல் பெயர் இடம்பெறவில்லை. வழக்கமாக இரண்டு ரிசர்வ் வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் இடம்பெறுவார்கள். ஆனால், சுமித் நாகல் பயிற்சிக்கு வராததால் நீக்கப்பட்டிருக்கிறார். அத்துடன், சுமித் நாகல் இனி அணியில் சேர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
  Next Story
  ×