search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    63 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்
    X

    63 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்

    முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 63 ரன்னிற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.

    பின்னர் 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க இருவரும் திணறினார்கள்.

    இந்தியா 4-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்கோர் 13 ரன்னாக இருக்கும்போது 1 ரன் எடுத்த நிலையில் தவான் வில்லே பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வில்லே பந்தில் க்ளீன் போல்டானார்.



    4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டோனி 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 11.5 ஓவரில் 63 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. 5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார்.

    இந்தியா 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 42 ரன்னுடனும், ஜாதவ் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×