என் மலர்
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான இளைஞர் கிரிக்கெட்டை மும்பையில் நடத்த வேண்டும்: வெங்சர்க்கார்
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளை மும்பையில் நடத்த வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
19 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வார்தா புயல் காரணமாக மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆகையால் இந்த தொடரை நடத்துவற்கு போதுமான அளவில் மைதானம் தயாராக இல்லை என்று பி.சி.சி.ஐ.க்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இதனால் இந்த போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இளைஞர் கிரிக்கெட் போட்டிகளை மும்பையில் நடத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்ற வகையில் நான் என்ன உணர்கிறேன் என்றால், இங்கிலாந்துக்கு எதிரான இளைஞர் கிரிக்கெட் போட்டிகளை ஒருவேளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தவில்லை என்றால், இந்தியாவிலேயே அதிக மைதானங்களை கொண்ட மும்பையில் போட்டிகளை நடத்த வேண்டும்.
இதேபோல் வங்காள தேசத்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியின் மாற்று மைதானமாக மும்பை இருக்க வேண்டும். மேலும், கிரிக்கெட்டுக்கு கட்டாயம் முன்னுரிமை இருக்கும் என நம்புகிறேன். இந்த போட்டிகள் நீண்ட நாட்களுக்கு முன்னே தி்ட்டமிடப்பட்டவை. இதனால் போட்டியை நடத்துபவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கக்கூடாது’’ என்றார்.

Next Story