என் மலர்

  செய்திகள்

  39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட்
  X

  39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட்.
  ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது.

  பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணியும் முறியடித்ததில்லை.

  ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஷிடேனின் ஷிடேன் பொறுப்பேற்ற பிறகு அந்த அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ரொனால்டோ, பென்சிமா, மார்சிலோ மற்றும் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் ஆகியோரின் ஆட்டத்தில் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை ருசித்து வருகிறது.

  இந்நிலையில், லா லகா தொடரின் இன்றைய போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கிரனாடா அணியை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 5-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக 39 போட்டிகளில் ரியல் மாட்ரிட் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இதன்மூலம் பார்சிலோனாவின் சாதனையை சமன் செய்துள்ளது.
  Next Story
  ×