search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே
    X

    மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே

    மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே.
    இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார்.

    கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ரூனே கோல் அடித்தார்.

    இந்த கோல் மான்செஸ்டர் அணிக்காக ரூனெ அடிக்கும் 249-வது கோல் ஆகும். இதன்மூலம் முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார்.

    ஏற்கனவே, இங்கிலாந்து அணிக்காக பாபி சார்ல்டன் 49 கோல்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை ரூனே கடந்த 2015-ல் முறியடித்தார். ரூனே தற்போது வரை 53 கோல்கள் அடித்துள்ளார்.

    2004-ம் ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்த ரூனே, முதல் போட்டியிலேயே பெனேர்பேஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியவர். மான்செஸ்டர் அணி வாங்கிய ஐந்து பிரிமீயர் லீக், இரண்டு லீக் கோப்பை, கடந்த சீசன் எஃப்.ஏ. கோப்பை, 2007-08 சாம்பியன் லீக் மற்றும் 2008 கிளப் உலகக்கோப்பையில் ரூனே பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×