என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட்
    X

    பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது.
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    பியர்சன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் மெக்கல்லம், அதன்பின் வந்த கிறிஸ் லைன் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 14.4 ஓவரிலேயே 174 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெக்கல்லம் 50 ரன்னுடனும், லைன் 98 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.



    மெக்கல்லம் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 13-வது ஓவரை டை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை மெக்கல்லம் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்க நினைத்தார். ஆனால் அவரது பேட் இரண்டாக உடைந்தது. இதை ரசிகர்கள் வேடிக்கையை பார்த்து ரசித்தனர்.
    Next Story
    ×