search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணக்கிறார்
    X

    பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணக்கிறார்

    டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவை சேர்ந்த அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். நீண்ட நாள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸ் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் அலெக்சிஸ் ஒஹனியனை மணப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து உள்ளார். அலெக்சிஸ், ரெட்டிட் இணையதளத்தின் உரிமையாளர் ஆவார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ரோம் நகரில் நடந்தது. ரோம்நகரில்தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர். அப்போது செரீனாவிடம் அலெக்சிஸ் காதலை தெரிவித்துள்ளார். அதை செரீனா ஏற்று கொண்டார். இதனால் நிச்சயதார்த்தத்தை ரோமில் நடத்த உள்ளனர்.
    Next Story
    ×