search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார்,ஸ்டீவன் சுமித்
    X

    இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார்,ஸ்டீவன் சுமித்

    ஆஸ்திரேலிய கேப்டன் 27 வயதான ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த 7-வது வீரராக பட்டியலில் இணைந்தார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
    ஆஸ்திரேலிய கேப்டன் 27 வயதான ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த 7-வது வீரராக பட்டியலில் இணைந்தார். அவர் 2016-ம் ஆண்டில் மட்டும் 11 டெஸ்டில் விளையாடி 4 சதங்கள் உள்பட 1,014 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக சதங்கள் அடித்தவர்களான இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் மொயீன் அலி (தலா 4 சதம்) ஆகியோரையும் சமன் செய்தார்.

    2014, 2015, 2016 என்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தலா ஆயிரம் ரன்களை ஸ்டீவன் சுமித் கடந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக (2001-2005) ஆயிரம் ரன்களை தாண்டியதே இந்த வகையில் சாதனையாக உள்ளது. அதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (2003-2005), இங்கிலாந்தின் டிரஸ்கோதிக் (2003-2005), கெவின் பீட்டர்சன் (2006-2008) ஆகியோர் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் இந்த இலக்கை கடந்திருக்கிறார்கள். அவர்களோடு இப்போது ஸ்டீவன் சுமித்தும் இணைந்து விட்டார்.

    மெல்போர்னில், ஸ்டீவன் சுமித்தின் ‘ஹாட்ரிக்’ சதமாக இதை வர்ணிக்கலாம். 2014-ம் ஆண்டு இங்கு நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 192 ரன்களும், 2015-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 130 ரன்களும் எடுத்திருந்தார்.
    Next Story
    ×