என் மலர்

  செய்திகள்

  ஆஸி.யின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?
  X

  ஆஸி.யின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான லயனுக்கு சிட்னி டெஸ்டில் உறுதியாக இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.
  ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 23 ஓவர்கள் வீசி 115 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டு மட்டுமே எடுத்துள்ளது. நாதன் லயனின் பந்து வீச்சு சில போட்டிகளில் சிறப்பான வகையில் பந்து வீசவில்லை. விக்கெட்டுக்களை எடுக்க சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஐந்து போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் சிட்னியில் நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் அவர் இடம்பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில் ‘‘சிட்னி டெஸ்டிற்கு அவர் நேரடியாக தகுதி பெறுவாரா?, என்பது எனக்கு உறுதியாக தெரியாது. அது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது. அவரது சிறந்த பந்து வீச்சை இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்தவில்லை. வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது மிகக்கடினம்.  பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொள்வார்கள். ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைக்காத போது துணைக்கண்ட (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) வீரர்களுக்கு பந்து வீசுவது மிகக்கடினம். இன்னும் கொஞ்சம் சிறந்த வகையில் நாதன் லயன் பந்து வீச வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
  Next Story
  ×