என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கடும் எதிர்ப்பால் ஆயுட்கால தலைவர் பதவி வேண்டாம் என கல்மாடி கடிதம்
By
மாலை மலர்28 Dec 2016 2:38 PM GMT (Updated: 28 Dec 2016 2:38 PM GMT)

ஐஓஏ-யின் ஆயுட்கால தலைவராக கல்மாடி மற்றும் சவுதாலா ஆகியோரும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கல்மாடி விலகியுள்ளார்.
சென்னையில் நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபேங் சிங் சவுதாலா ஆகியோர் ஆயுட்கால தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் இரண்டு பேர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால், இந்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் கடும் அதிர்ச்சிகுள்ளானார். அவர்கள் இரண்டு பேரையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் சுரேஷ் கல்மாடி இன்று ஐ.ஓ.ஏ.யின் தலைவர் என். ராமச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘என்னை ஆயுட்கால தலைவர் பதவிக்கு கலந்தாலோசித்ததற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்றி கூறுகிறேன். எனினும், மரியாதைக்குரிய அந்த பதவியை பெற இது சரியான நேரம் என்று நான் கருதவில்லை’’ என்று கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் சவுதாலா, ‘‘என்னுடைய தேர்வுக்கு மிகவும் தெளிவானதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நேரம் வரை நான் இந்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’’ என்றார்.

Next Story
×