search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன
    X

    இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.
    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.

    அதன்பின் இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக சொந்த நாடு சென்றுள்ளது. பின்னர் இந்தியா திரும்பி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 12 நாட்களில் (26-ந்தேதியுடன்) டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்கு தீர்ந்தன என்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    37406 இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான் சர்வதேச போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு முன் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி நடைபெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி 19-ந்தேதி கட்டாக்கிலும், 3-வது ஒருநாள் போட்டி 22-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது. அதன்பின் முதல் டி20 போட்டி ஜனவரி 26-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×