என் மலர்

  செய்திகள்

  ரஞ்சி கிரிக்கெட் கால் இறுதி: குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை
  X

  ரஞ்சி கிரிக்கெட் கால் இறுதி: குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சி காலிறுதிப் போட்டியில் குஜராத் வீரர் சமித் கோஹெல் 359 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  ஜெய்ப்பூர்:

  மாநிலங்களுக்கு இடையிலான ரஞ்சி காலிறுதிப் போட்டிகள் தற்போது அரையிறுதியை எட்டியுள்ளன. இந்நிலையில் ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சி காலிறுதிப் போட்டியில், குஜராத் அணியின் தொடக்க வீரர் சமித் கோஹெல்(26) ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த தொடக்க வீரர் என்ற சாதனை சமித்தின் வசமாகியுள்ளது.

  5 நாள் ஆட்ட முடிவில் குஜராத் அணி 706 ரன்களை ஒடிசாவுக்கு இலக்காக நிர்ணயித்திருக்கிறது. அதிக ரன்கள் குவித்ததன் மூலம் குஜராத் அணி அரை இறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட  உறுதியாகியுள்ளது.

  முதல்தர கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை மற்றும் முச்சதங்களை சமித் கோஹெல் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×