search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: 37 வீரர்கள் விடுவிப்பு
    X

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: 37 வீரர்கள் விடுவிப்பு

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் 37 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

    இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், டுட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

    இதில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது இடத்தை பிடித்தது.

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள், விடுவித்த வீரர்கள் விவரத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.

    37 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 8 அணிகளும் 120 வீரர்களை தக்க வைத்துள்ளது. நடப்பு சாம்பியனான தூத்துக்குடி அணி 19 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டது. யாரையும் விடுவிக்கவில்லை.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு உள்ளது. ரஜில் அப்துல் ரகுமான், நிர்மல் குமார், வாசுதேவன், ஷிபிஜவகர் ஆகிய 4 வீரர்களை விடுவித்தது.

    மதுரை அணி அதிகபட்சமாக 9 வீரர்களை விடுவித்து 10 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொண்டுள்ளது. ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி முன்னணி வீரரான ஷாருக்கான் உள்பட 6 வீரர்களையும், கோவை அணி 4 வீரர்களையும், திருவள்ளூர் அணி 3 வீரர் களையும், திண்டுக்கல் அணி 5 வீரர்களையும், காரைக்குடி காளை 6 வீரர்களையும் விடுவித்தது.

    காஞ்சி வாரியர்ஸ் 13 வீரர்களையும், கோவை 15 வீரர்களையும்,திருவள்ளூர் அணி 16 வீரர்களையும், திண்டுக்கல் அணி 16 பேரையும், காரைக்குடி காளை 14 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டது.

    Next Story
    ×