என் மலர்

  செய்திகள்

  ஐ.சி.சி. டெஸ்ட் அணி மாற்றம் செய்யப்படுமா?
  X

  ஐ.சி.சி. டெஸ்ட் அணி மாற்றம் செய்யப்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் வீராட்கோலி இடம் பெறாதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  புதுடெல்லி:

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த 22-ந்தேதி சிறந்த வீரர்களை அறிவித்தது. அஸ்வின் ஆண்டின் சிறந்த வீரராகவும், டெஸ்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

  இதேபோல இந்த ஆண்டின் டெஸ்ட் அணியும், ஒருநாள் போட்டி அணியும் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி ஐ.சி.சி. கனவு அணியில் கேப்டனாக வீராட்கோலி தேர்வாகி இருந்தார்.

  ஆனால் டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஒரே ஒரு இந்தியரான அஸ்வின் மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

  டெஸ்ட் அணியில் வீராட்கோலி இடம் பெறாதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடி 3 இரட்டை சதம் அடித்து இருந்தார். கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்டில் தோல்விகளை சந்திக்கவில்லை. அவரது ஆட்டமும் சிறப்பாக இருந்தது. ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறாதது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் வல்லுனர்களும் சாடி இருந்தனர்.

  இதன்காரணமாக ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அக்டோபர் மாதம் வரையே வீரர்களின் திறமை கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

  இதனால் ஐ.சி.சி. இந்த வி‌ஷயத்தில் மாற்றம் செய்யுமா? என்பது கேள்விக்குறியே.

  Next Story
  ×