என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்து-வங்காளதேசம் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
  X

  நியூசிலாந்து-வங்காளதேசம் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
  கிறைஸ்ட்சர்ச் :

  நியூசிலாந்துக்கு சென்றுள்ள முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது.

  இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று நடக்கிறது. தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்து 5 மாதங்களாக ஓய்வில் இருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் அணிக்கு திரும்பியுள்ளார். 20 ஓவர் உலக கோப்பையின் போது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய முஸ்தாபிஜூர் ரகுமானின் வருகையால் வங்காளதேச அணி உற்சாகமடைந்துள்ளது.

  2013-ம் ஆண்டில் தங்களது இடத்தில் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்த வங்காளதேச அணி இப்போது அவர்களது மண்ணிலும் அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறது.

  Next Story
  ×