search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதி: மும்பை, குஜராத் அணிகள் முன்னிலை
    X

    ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதி: மும்பை, குஜராத் அணிகள் முன்னிலை

    ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை, குஜராத் அணிகள் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
    ராய்ப்பூர் :

    ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை - ஐதராபாத் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 294 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஐதராபாத் அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 280 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 82 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் அபிஷேக் நாயர் 4 விக்கெட்டுகளும், விஜய் கோஹில் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகுர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    அடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜெய்ப்பூரில் நடந்து வரும் ஒடிசாவுக்கு எதிரான மற்றொரு கால்இறுதியில் குஜராத் அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. இதில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 263 ரன்களும், ஒடிசா 199 ரன்களும் எடுத்தன. 64 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. சமித் கோஹெல் 110 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். குஜராத் அணி இதுவரை 310 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

    வதோதராவில் நடக்கும் அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 3-வது நாளான நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. விராட் சிங் (107 ரன்) சதம் விளாசினார். பின்னர் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை பிடித்த அரியானா அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருக்கிறது.

    4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.
    Next Story
    ×