என் மலர்

  செய்திகள்

  ஆக்கி, கிரிக்கெட் அணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
  X

  ஆக்கி, கிரிக்கெட் அணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது உரையின் போது விளையாட்டில் சாதித்த இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் புகழாரம் சூட்டினார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
  பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது உரையின் போது விளையாட்டில் சாதித்த இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் புகழாரம் சூட்டினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, கடைசி டெஸ்டில் முச்சதம் விளாசிய கருண் நாயர், 199 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல், மற்றும் விராட் கோலியின் பேட்டிங்கை புகழ்ந்து தள்ளினார்.

  விராட் கோலியின் கேப்டன்ஷிப் கவரும் வகையில் இருந்ததாக பாராட்டினார். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

  இந்திய ஜூனியர் ஆக்கி அணியையும் பாராட்ட தவறவில்லை. “ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை ஏந்தியுள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. அதை விட ஆக்கி துறைக்கு மிகப்பெரிய செய்தி. சாதித்த இளம் வீரர்களுக்கு வாழ்த்துகள்’ என்றார்.
  Next Story
  ×