என் மலர்

  செய்திகள்

  சென்னை மைதானத்தில் 83 வருட சாதனையை உடைத்த ரஷித்- டவ்சன் ஜோடி
  X

  சென்னை மைதானத்தில் 83 வருட சாதனையை உடைத்த ரஷித்- டவ்சன் ஜோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மைதானத்தில் இங்கிலாந்து ஜோடி 1933-34 சீசனில் வைத்த சாதனையை தற்போது ரஷித் - டவ்சன் ஜோடி உடைத்துள்ளது.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு லியாம் டவ்சனுடன் அடில் ரஷித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 108 ரன்கள் குவித்துவிட்டது. இதனால் பல்வேறு சாதனைகளை இந்த ஜோடி படைத்துள்ளது.

  1933-34-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்டில், இங்கிலாந்து அணியின் ஹெட்லி வெரிட்டி - டக்ளஸ் ஜார்டைன் 8-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. இந்த 83 வருட சாதனையை இன்று இந்த ஜோடி 108 ரன்கள் எடுத்து உடைத்துள்ளனர்.

  அதுபோக ஒட்டு மொத்தமாக 8-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 3-வது ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டு ராய் இல்லிங்வொர்த் - பீட்டர் லெவர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. 1936-ம் ஆண்டு வால்டர் ராபின்ஸ் - ஹெட்லி வெரிட்டி 138 ரன்கள் சேர்த்தது. அதன்பின் தற்போது இந்த ஜோடி 108 ரன்கள் சேர்த்துள்ளது.

  8-வது மற்றும் 9-வது வீரர் அரைசதம் அடிப்பது இங்கிலாந்து அணியில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் 1936-ல் வால்டர் ராபின்ஸ் 76 ரன்னும், 9-வது நபராக களம் இறங்கிய ஹெட்லி வெரிட்டி 66 ரன்னும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அறிமுக போட்டியில் 8-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை லியாம் டவ்சன் (66 அவுட் இல்லை) பெற்றுள்ளார். இதற்கு முன் 1979-ம் ஆண்டு டேவிட் பேர்ஸ்டோவ் 59 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.

  இந்தியாவிற்கு எதிராக அறிமுகமாகி 8-வது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த ஐந்தாவது வீரர் டவ்சன் ஆவார். நியூசிலாந்து அணியின் நீசம் 2013-14-ல் 137 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும்.
  Next Story
  ×