என் மலர்
செய்திகள்

ஹெல்மெட் போட மாட்டேன்: காயம் அடைந்த நடுவர் கூறுகிறார்
டெஸ்ட் போட்டியில் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிய மாட்டேன், ஐந்து நாட்கள் ஹெல்மெட்டுடன் நடுவராக செயல்படுவது மிகக்கடினம் என ரீபெல் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பால் ரீபெல் நடுவராக பணியாற்றினார். அவர் லெக் அம்பயராக நின்றிருக்கும்போது புவனேஸ்வர் பீல்டிங் செய்து வீசிய பந்து ரீபெல்லின் பின்பக்க தலையில் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில் சரிந்தார்.
பின்னர் அவர் நடுவராக பணியாற்றவில்லை. சென்னையில் நேற்று தொடங்கிய போட்டியில் நடுவராக பணியாற்ற தயாராக இருந்தார். ஆனால், ஐ.சி.சி. அவரது உடல்நிலையை காரணம் காட்டி பணியாற்ற விடவில்லை. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தலையில் காயம் ஏற்பட்டதால் இனிமேல் பங்கேற்கும் போட்டியின்போது ஹெல்மெட் அணிந்து கொள்வீர்களா? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், நடுவராக பணியாற்றினால் ஹெல்மெட் அணிய மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து ரீபெல் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் ஹல்மெட் அணிந்து கொண்டு நடுவராக பணியாற்றினால், அதிக சுமையாக இருக்கும். அதேவேளையில் வெப்பமும் அதிக அளவில் தலையை தாக்கும். இது நடக்கக்கூடிய காரியம் அல்ல’’ என்றார்.

Next Story