என் மலர்

  செய்திகள்

  சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவிப்பு
  X

  சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்துள்ளது.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

  அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் மேலும் ஒரு ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் பட்லர் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மொயீன் அலி 146 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆட்டம் தொடங்கியதுமே இந்தியா மூன்று முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றியது. அப்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.  இதனால் அந்த அணியை 375 ரன்களுக்குள் இந்தியா சுருட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் டவ்சன் மற்றும் ரஷித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. ரஷித் 60 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த பிராட் 19 ரன்னி்ல் வெளியேறினார். ஆனால் அறிமுக வீரர் டவ்சன் அரைசதம் அடித்தார். கடைசியாக வந்த பால் 12 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் போல்டாக, இங்கிலாந்து அணி 157.2 ஓவரில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டவ்சன் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.  பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் காயம் காரணமாக தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் உடன் பார்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்தியா 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
  Next Story
  ×