search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்
    X

    மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மயிரிழையில் ஜோ ரூட், பேர்ஸ்டோவ் இழந்துள்ளனர்.
    இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் ஜோ ரூட். விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் பேர்ஸ்டோவ். இருவரும் இந்த வருடத்தில் நம்பமுடியாத அளவில் பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகின்றனர். இந்த வருடம் இருவரும் 1000 ரன்களை கடந்து பெருமை சேர்த்தனர். மேலும், ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருந்தது.

    இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடந்த 2002-ம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்சில் 1481 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து வீரர் ஒரே வருடத்தில் அதிக ரன் குவித்த சாதனையாக இருந்தது.

    இந்த சாதனையை ஜோ ரூட் இன்று எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 88 ரன்களில் அவுட் ஆனார். இதனால் 10 ரன்னில் சாதனையை தவற விட்டுவிட்டார். இதேபோல் பேர்ஸ்டோவ் 1469 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 49 ரன்னில் அவுட்டானதால் 11 ரன்னில் சாதனையை தவறவிட்டுவி்ட்டார்.

    இருந்தாலும் இருவருக்கும் 2-வது இன்னிங்ஸ் உள்ளது. அதில் வாகன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×