என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து நிதான ஆட்டம்
    X

    சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து நிதான ஆட்டம்

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடிவருகிறது.
    சென்னை:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி நடந்து முடிந் துள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையில் நடந்த 4-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 26 ரன் வித்தியாசத்திலும் இந்தியா - வெற்றி பெற்றது.

    இதனால் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

    இந்திய அணியில் இரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. புவனேஸ்வர் குமாருக்கு பதில் இஷாந்த் சர்மா இடம் பெற்றார். கடந்த போட்டியில் சதம் அடித்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு பதில் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இங்கிலாந்து அணியில் காயம் அடைந்த ஆண்டர்சன் மற்றும் கிறிஸ்வோக்ஸ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஸ்டூவர்ட் பிராட், புதுமுக வீரர் டவ்சன் இடம் பெற்றனர். இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, கருண் நாயர், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, அமித்மிஸ்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: குக் (கேப்டன்), ஜென்னிங்ஸ, ஜோரூட், மொய்ன் அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், டவ்சன், ரஷீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேக்பால்.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் கூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் குக், ஜென்னிங்ஸ் களம் இறங்கினார்கள்.

    6-வது ஓவரில் இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. இஷாந்த் சர்மா பந்தில் ஜென்னிங்ஸ் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் ஒரு ரன் எடுத்தார்.


    அடுத்து ஜோரூட் களம் வந்தார். கேப்டன் கூக் 10 ரன்னில் ஜடேஜா பந்தில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 21 ரன்னாக இருந்தது.


    அடுத்து ஜோரூட்டுடன் மொய்ன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

    இங்கிலாந்து 23.1 ஓவரில் 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 29 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்தது. ஜோரூட் 44 ரன்னுடனும், மொய்ன் அலி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×