search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் மக்கள் பலியான நிலையில் வலைப் பயிற்சி ஒன்றும் பெரிதல்ல- குக்
    X

    புயலால் மக்கள் பலியான நிலையில் வலைப் பயிற்சி ஒன்றும் பெரிதல்ல- குக்

    வார்தா புயல் காரணமாக மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் வலைப்பயிற்சியை ரத்து செய்தது ஒன்றும் பெரியதல்ல என அலஸ்டைர் குக் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறந்த முறையில் செய்து வைத்திருந்தது.

    ஆனால், திங்கட்கிழமை சென்னையை சூறையாடிய புயல் சேப்பாக்கம் மைதானத்தையும் விட்டு வைக்கவில்லை. மைதானத்தில் உள்ள ராட்சத டிஜிட்டல் போர்டு மற்றும் இருக்கைகள் சேதம் அடைந்தது. அதேவேளையில் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு (பவுண்டரி கோடு அருகே) எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதனால் நாளை டெஸ்ட் போட்டி நடக்க எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இரு அணி வீரர்களால் பயிற்சியில் மட்டும் ஈடுபடமுடியவில்லை. இதனால் வலைப்பயிற்சி இல்லாமல் களம் இறங்குகிறது.

    இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டைர் குக் கூறுகையில், சென்னை மக்கள் உயிரிழந்திருக்கும் சமயத்தில்,  வலைப்பயிற்சி இல்லாதது பெரிய விஷயம் அல்ல என்று கூறியுள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற எல்லா வகை சூழ்நிலைகளையும் சந்திக்க நேரிடும். என்னுடைய 140 போட்டிகளில் இதுவரை வலைப்பயிற்சி இல்லாமல் நான் களம் இறங்கியது கிடையாது. ஆனால், புயலால்  மக்கள் பலியாகி உள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    மக்கள் துயரத்தில் இருக்கும்போது ஒருநாளைக்கு முந்தைய வலைப்பயிற்சி சிறந்ததாக இருக்காது. நாங்கள் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வந்தோம். ஏர்போர்ட்டில் இருந்து ஓட்டல் வந்தோம். சுற்றிப் பார்க்கையில், நாம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை நினைவு படுத்தியது’’ என்றார்.
    Next Story
    ×