search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
    X

    மொகாலி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

    மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்கள் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 417 ரன்கள் குவித்தது.

    134 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் (78), ஹமீத் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 236 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவிற்கு 103 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    103 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் முரளி விஜய் மற்றும் பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    முரளி விஜய் 7 பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். இருவரும அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக பார்தீவ் பட்டேல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிக்  கொண்டே இருந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 17.2 ஓவரில் 88 ரன்னாக இருக்கும்போது புஜாரா 25 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் ஆட்டம் இழந்தார்.



    அடுத்து 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி களம் இறங்கினார். 21-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் பார்தீவ் பட்டேல். இந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பார்தீவ் பட்டேல் 67 ரன்னுடனும், விராட் கோலி 6 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்ததுள்ளதால், இனிமேல் இந்தியா தொடரை இழக்க வாய்ப்பில்லை.
    Next Story
    ×