என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கேரளா இன்று பலப்பரீட்சை
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கேரளா இன்று பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 51-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

  கொல்கத்தா:

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 51-வது ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

  இதில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  இரு அணிகளும் 18 புள்ளியுடன் உள்ளன. வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறும். கொல்கத்தா 4 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியுடன் உள்ளது. கேரளா 5 வெற்றி, 3 டிரா, 4 தோல்வியுடன் இருக்கிறது. கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் கொல்கத்தா 3-வது இடத்திலும், கேரளா 4-வது இடத்திலும் உள்ளன.

  கொல்கத்தா அணி ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி இருந்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் உள்ளது. 5-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. கேரளாவும் அதே நிலையில் இருக்கிறது. பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது.

  வெற்றி பெற முடியா விட்டாலும் தோல்வியை தவிர்க்க இரு அணிகளும் ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடும். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×