search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தள்ளி வைக்கப்பட்ட ஆட்டத்தை மீண்டும் நடத்த தமிழ்நாடு, மும்பை எதிர்ப்பு
    X

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தள்ளி வைக்கப்பட்ட ஆட்டத்தை மீண்டும் நடத்த தமிழ்நாடு, மும்பை எதிர்ப்பு

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தள்ளி வைக்கப்பட்ட இரண்டு லீக் ஆட்டங்களை நடத்துவது நியாயமற்றது என்று தமிழ்நாடு மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    மும்பை :

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்-பெங்கால் (குரூப் ஏ), ஐதராபாத்-திரிபுரா (குரூப் சி) அணிகள் இடையிலான லீக் ஆட்டங்கள் டெல்லியில் கடந்த 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருந்தது. டெல்லியில் அந்த நாட்களில் நிலவிய பனி மற்றும் புகை மாசு காரணமாக இந்த இரண்டு ஆட்டமும் தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது அந்த இரண்டு லீக் ஆட்டங்களும் முறையே விசாகப்பட்டினம், கொல்கத்தாவில் டிசம்பர் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கால்இறுதி, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி தேதியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கால்இறுதி போட்டி டிசம்பர் 24-ந் தேதியும், அரை இறுதிப்போட்டி ஜனவரி 3-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜனவரி 12-ந் தேதியும் தொடங்குகிறது.

    மற்ற அணிகளின் லீக் ஆட்டம் முடிந்த பிறகு தள்ளி வைக்கப்பட்ட இரண்டு லீக் ஆட்டங்களை நடத்துவது நியாயமற்றது என்று தமிழ்நாடு மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்ய முடிவு செய்துள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 26 புள்ளியும், தமிழ்நாடு அணி 7 ஆட்டத்தில் விளையாடி 23 புள்ளியும், குஜராத் அணி 5 ஆட்டத்தில் ஆடி 21 புள்ளியும், பெங்கால் அணி 5 ஆட்டத்தில் ஆடி 16 புள்ளியும் பெற்றுள்ளன.
    Next Story
    ×