என் மலர்

  செய்திகள்

  வார்த்தை போர்: பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலடி கொடுத்த விராட் கோலி
  X

  வார்த்தை போர்: பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொகாலி டெஸ்டில் விராட் கோலியை கிண்டல் அடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு, இன்று அவர் அவுட்டாகி செல்லும்போது விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.

  அப்போது இந்திய வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்றார். அதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவரும் அப்போது முறைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கப்பட்டார்.

  பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சந்தோசத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் திடீரென வாயை மூடிக் கொண்டார். முதல் இன்னிங்சில் அபராதம் விதிக்கப்பட்டதை கேலி செய்யும் வகையில் அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அப்படி செய்தார்.  இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடும்போது பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது விராட் கோலி தனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து ‘மூச்’ விடக்கூடாது என்ற தோனியில் செய்கை காட்டி அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்துகிறேன் என்று பதிலடி கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் பேசாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
  Next Story
  ×