என் மலர்

  செய்திகள்

  ஹாங்காங் ஓபன்: பி.வி. சிந்து, சமீர் வர்மா இறுதிப் போட்டியில் தோல்வி
  X

  ஹாங்காங் ஓபன்: பி.வி. சிந்து, சமீர் வர்மா இறுதிப் போட்டியில் தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தேசிய சாம்பியன் வீரர் சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்தனர்.
  ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் சமீர் வர்மா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.

  இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. சிந்து சீன தைபேயின் தாய் சூ யிங்கை எதிர்கொண்டார்.

  இதுவரை சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த சிந்து இறுதிப் போட்டியில் சற்று தடுமாறினார். இதை சாதகமாக எடுத்துக் கொண்ட சீன தைபே வீராங்கனை சூ யிங் 15-21, 17-21 என நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். சிந்து 41 நிமிடங்களில் தனது தோல்வியை ஓப்புக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

  கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து இதில் 2-வது இடமே பிடிக்க முடிந்தது.  ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்திய தேசிய சாம்பியன் வீரர் சமீர் வர்மா உள்ளூர் வீரரான கா லாங் அங்குசை எதிர்கொண்டார். உள்ளூர் வீரருக்கு ஈடுகொடுத்து சமீர் விளையாடினார். முதல் செட்டை 14-21 என இழந்தாலும் 2-வது செட்டை 21-10 எனக் கைப்பற்றினார். ஆனால், சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 11-21 என இழந்தார். இதனால் முதன்முறையாக சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் ஏமாந்தார்.
  Next Story
  ×