என் மலர்

  செய்திகள்

  பிங்க் பால் டெஸ்ட்: பிரகாசமான நிலையில் ஆஸ்திரேலியா
  X

  பிங்க் பால் டெஸ்ட்: பிரகாசமான நிலையில் ஆஸ்திரேலியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடிலெய்டில் நடைபெற்று வரும் பகல்- இரவு பிங்க் பால் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
  ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு பிங்க் பால் போட்டியாக நடந்து வருகிறது.

  நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கவாஜா சிறப்பாக விளையாடி 145 ரன்கள் சேர்த்தார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 53 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அப்பாட், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 124 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஸ்டீபன் குக் மற்றும் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

  அடுத்து குக் உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அம்லா 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த டுமினி (26), டு பிளிசிஸ் (12), பவுமா (210, அப்பாட் (0) அடுத்தடுத்து அவுட்டாக, தென்ஆப்பிரிக்கா தடுமாற ஆரம்பித்தது.

  ஆனால் தொடக்க வீரராக களம் இங்கிய குக் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அத்துடன் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் அப்படியே நின்று விட்டார். அவருக்கு துணையாடிக டி காக் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.  3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. குக் 81 ரன்னுடனும், டி காக் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

  தற்போது வரை தென்ஆப்பிரிக்கா அணி 70 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் டி காக் மற்றும் குக் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி முன்னிலையை 200-க்கு மேல் கொண்டு வந்தால்தான் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லையெனில் ஆஸ்திரேலியா இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.  ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×