என் மலர்

  செய்திகள்

  மொகாலி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8
  X

  மொகாலி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொகாலியில் இன்று தொடங்கிய 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

  இந்திய அணியில் சகா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்குப் பதிலாக பார்தீவ் பட்டேல் மற்றும் கருண் நாயர் ஆகியோர்  இடம்பிடித்தனர். இங்கிலாந்து அணியில் பிராட், பிளக்கெட், அன்சாரி ஆகியோருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ், பட்லர் மற்றும் கரேத் பேட்டி ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

  தொடக்க வீரர்களாக அலஸ்டைர் குக், ஹமீத் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹமீத் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜயந்த் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டம் இழந்த அடுத்த ஓவரில் குக் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார்.  இதனால் இங்கிலாந்து அணி 51 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து வந்த மொயீன் அலி 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் பேர்ஸ்டோவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அரைசதம் அடித்த அவர், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜயந்த் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

  கடைசி ஒவருக்கு முந்தைய ஓவரில் கிறிஸ் வோக்ஸ் 25 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. ரஷித் 4 ரன்னுடனும், பேட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.  இந்திய அணி சார்பில் யாதவ், அஸ்வி்ன் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். நாளை ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்தின் எஞ்சிய இரண்டு விக்கெட்டுக்களையும் இந்தியா விரைவில் வீழ்த்தி, முதல் இன்னிங்சை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×