என் மலர்

  செய்திகள்

  நான் ஏதாவது செய்திருந்தால் ஐ.சி.சி. என்னிடம் கேட்டிருக்கும்: கோலி
  X

  நான் ஏதாவது செய்திருந்தால் ஐ.சி.சி. என்னிடம் கேட்டிருக்கும்: கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜ்கோட் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும் விதத்தில் நான் ஏதாவது செய்திருந்தால் ஐ.சி.சி. என்னிடம் கேள்வி கேட்டிருக்கும் என்று விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் வீடியோ மற்றும் போட்டோவையும் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஆனால் போட்டி முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டு எழுந்ததால், இதுகுறித்து விசாரிக்க தேவையில்லை என்று ஐ.சி.சி. கூறிவிட்டது. நாளை மொகாலியில் 3-வது டெஸ்ட் நடக்கிறது. இந்த டெஸ்ட் குறித்து விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது அவர் மீதான புகார் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு விராட் கோலி பதிலளிக்கையில் ‘‘ராஜ்கோட் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும் விதத்தில் நான் ஏதாவது செய்திருந்தால் ஐ.சி.சி. என்னை அழைத்து விசாரித்திருக்கும். இந்த தொடரில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான செயல்தான் இது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற பின் இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. நான் ராஜ்கோட் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக சொல்வதை, விசாகப்பட்டினம் டெஸ்டில் நாம் வெற்றி பெற்ற பின் வெளிக்கொண்டு வருவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.
  Next Story
  ×