search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி மைதான கண்ணோட்டம்
    X

    மொகாலி மைதான கண்ணோட்டம்

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மொகாலி மைதானம் பற்றி சிலவற்றை காண்போம்.
    மொகாலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய இப்போட்டியில் இந்தியா தோற்றது.

    இந்த மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 6 வெற்றி பெற்றது. 5 டிரா ஆனது. ஒரு போட்டியில் தோற்றது.

    2003-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 630 ரன் குவித்ததே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 2003-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 516 ரன் குவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2013-ம் ஆண்டு) இந்திய வீரர் ஷிகார் தவான் குவித்த 187 ரன்னே ஒரு நபரின் அதிக ரன்னாகும்.

    மொகாலி மைதானத்தில் சச்சின் தெண்டுல்கர் 11 ஆட்டத்தில் 767 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதம் அடங்கும். இந்தியாவின் அனில் கும்ப்ளே 7 ஆட்டத்தில் 36 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    நியூசிலாந்து வீரர் நாஷ் 27 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

    கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ரன்னில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×