என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி நெருக்கடியில் சென்னை - கவுகாத்தி நாளை மோதல்
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி நெருக்கடியில் சென்னை - கவுகாத்தி நாளை மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் 49-வது நடப்பு லீக் சாம்பியன் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
  சென்னை:

  3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் 49-வது நடப்பு லீக் சாம்பியன் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.

  இப்போட்டி சென்னை ஜவகர்லால் ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டம் சென்னை அணிக்கு மிக முக்கியமானது. அந்த அணி 12 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 ஆட்டம் டிரா ஆனது. 4 போட்டியில் தோற்றது.

  14 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் இருக்க வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டத்திலும் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வேண்டும்.

  இதனால் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம். ஏனென்றால் சென்னை அணியின் கோல் வித்தியாசம் மோசமாக (-4) இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவதால் சென்னை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கவுகாத்தி அணி 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 டிரா, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கும் வெற்றி கட்டாயம் ஆகும்.
  Next Story
  ×