search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்பு
    X

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்பு

    பாங்காக்கில் நாளை நடக்க இருக்கும் ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளதாக அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நாளை (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

    இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆட மறுத்ததால் இந்திய பெண்கள் அணியின் தரவரிசையில் இருந்து 6 புள்ளிகளை அபராதமாக பறித்து ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் 2017-ம் ஆண்டு உலக கோப்பைக்கு நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இந்திய பெண்கள் அணி இழந்தது. ஐ.சி.சி. நடவடிக்கையால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் சூழலில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி நேற்று உறுதி செய்தார். ஆனால் போட்டி அட்டவணைப்படி (நவ.29-ந்தேதி) இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுமா?, இல்லையா? என்பது குறித்து சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×