search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பஞ்சாப் ஆட்டம் டிரா
    X

    ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பஞ்சாப் ஆட்டம் டிரா

    ரஞ்சி கிரிக்கெட்டில், தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
    நாக்பூர் :

    ரஞ்சி கிரிக்கெட்டில், தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் 284 ரன்னும், தமிழ்நாடு அணி 354 ரன்னும் எடுத்தன. 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து இருந்தது.

    4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 79 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மன்தீப்சிங் 128 ரன்கள் விளாசினார். பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 37 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

    முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணி 3 புள்ளியும், பஞ்சாப் அணி ஒரு புள்ளியும் பெற்றன. 7 ஆட்டங்கள் முடிவில் தமிழக அணி 2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 டிராவுடன் 26 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.

    வயநாட்டில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான (பி பிரிவு) லீக் ஆட்டத்தில் 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி அதை 41.4 ஓவர்களில் எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×