search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக கரேத் பேல் 4 மாதங்கள் ஓய்வு
    X

    காயம் காரணமாக கரேத் பேல் 4 மாதங்கள் ஓய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரியல் மாட்ரிட் அணியின் கரேத் பேல் முழங்கால் காயம் காரணமாக ஆபரேசன் செய்ய உள்ளார். இதனால் நான்கு மாதங்கள் அவர் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேல்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கரேத் பேல். இவர் ஸ்பெயினின் தலைசிறந்த கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வருகிறார்.

    நேற்று முனதினம் செவ்வாய்க்கிழமை சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஸ்போர்ட்டிங் லிஸ்பான் அணிக்கெதிராக விளையாடினார். இதில் 2-1 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.



    இந்த போட்டியின்போது கரேத் பேல்-க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த வாரம் ஆபரேசன் செய்ய உள்ளார். ஆகவே, நான்கு மாதங்கள் பேல் ஓய்வில் இருக்க உள்ளார். இதனால் மார்ச் மாதம் 24-ந்தேதி டப்ளின் அயர்லாந்து குடியரசு நாட்டிற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாட மாட்டார்.

    கடந்த மாதம் ரியல் மாட்ரிட் உடன் 2022-ம் ஆண்டு வரை தனது ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×