search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிலெய்டு டெஸ்ட்: 259 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த டு பிளிசிஸ்
    X

    அடிலெய்டு டெஸ்ட்: 259 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த டு பிளிசிஸ்

    அடிலெய்டு டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் குக், எல்கர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 40 ரன்கள் எடுத்தார். ஆனால் எல்கர் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஸ்டார்க் வீழ்த்தினார். அடுத்து வந்த அம்லா, டுமினி ஆகியோர் தலா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    ஆனால், ஐந்தாவது வீரராக களம் இறங்கிய கேப்டன் டு பிளிசிஸ் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிக்கா அணி 76 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.



    முதல் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுக்களை விரைவில் வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்தில் டு பிளிசிஸ் இந்த முடிவை எடுத்தார். டுபிளிசிஸ் 118 ரன்னுடனும், ஷாம்சி 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேர்டு தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜாவும் ரென்ஷாவும் களம் இறங்கினார்கள். இருவரும் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

    கவாஜா 3 ரன்னுடனும், ரென்ஷாவ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×