search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தேன்: பார்த்தீவ் பட்டேல்
    X

    இந்திய அணியில் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தேன்: பார்த்தீவ் பட்டேல்

    இந்திய அணியில் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்ததாக பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
    மொகாலி:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மொகாலியில் தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் 31 வயதான பார்த்தீவ் பட்டேல் இடம் பெற்று உள்ளார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா காயம் அடைந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    8 ஆண்டு இடை வேளைக்கு பிறகு பார்த்தீவ் பட்டேல் டெஸ்ட் அணியில் விளையாட இருக்கிறார். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதால் குஜராத் ரஞ்சி அணியில் மும்பைக்கு எதிராக ஹூப்ளி மைதானத்தில் ஆடி வந்த அவர் மொகாலிக்கு விரைந்தார். அவர் அணியோடு இன்று இணைந்து கொள்வார்.

    பார்த்தீவ் பட்டேலின் தேர்வு ஆச்சரியமானதே. சகாவுக்கு பதிலாக நமன் ஒஜா, சாம்சன், ரிசப்பன்ட் போன்ற இளம் வீரர்களில் ஒருவர் தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேர்வு குழுவினரோ அவர்களை நிராகரித்துவிட்டு பார்த்தீவ் பட்டேல் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்து உள்ளது.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் அணியில் விளையாட இருப்பது குறித்து பார்த்தீவ் பட்டேல் கூறியதாவது:-

    விருத்திமான் சகா காயம் அடைவார் என்பதை எதிர்பார்க்கவில்லை. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். நம்பிக்கையுடனும் இருந்தேன். மீண்டும் டெஸ்ட் அணியில் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் என்னால் நன்றாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் கடினமாக உழைத்து தேர்வு ஆகி இருக்கிறேன். அணிக்கு தேர்வு பெற்றது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கவில்லை.

    இவ்வாறு பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
    Next Story
    ×