search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: கவுசிக் காந்தி சதத்தால் தமிழகம் 354 ரன் குவிப்பு
    X

    பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: கவுசிக் காந்தி சதத்தால் தமிழகம் 354 ரன் குவிப்பு

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கவுசிக் காந்தி சதத்தால் தமிழக அணி 354 ரன்கள் குவித்தது.
    நாக்பூர் :

    ரஞ்சி கிரிக்கெட்டில், தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து இருந்தது. கவுசிக் காந்தி 75 ரன்னுடனும், சங்கர் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் 121.1 ஓவர்களில் 354 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கவுசிக் காந்தி 164 ரன்கள் சேர்த்தார். இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

    குஜராத்தில் நடந்து வரும் ரஞ்சி கிரிக்கெட்டில் சத்தீஷ்கார் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் தன்மாய் அகர்வால் பீல்டிங் செய்கையில் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் மெக்தி ஹசன் வீசிய பந்தை சத்தீஷ்கார் அணி வீரர் மனோஜ்சிங் அடித்து ஆடினார். அதனை தன்மாய் அகர்வால் பிடிக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பந்து அவரது தலையில் தாக்கியது. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தப்பினார். பந்து தாக்கியதும் தன்மாய் அகர்வாலுக்கு மைதான மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அவர் மீண்டும் களம் இறங்கினார்.

    Next Story
    ×