என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’
    X

    பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’

    நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இது பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை விட 67 ரன் கூடுதலாகும்.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடை பெற்று வருகிறது.

    முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது நாளில் பாகிஸ்தான் அணி 133 ரன்னில் சுருண்டது. கேப்டன் மிஸ்பா அதிக பட்சமாக 31 ரன் எடுத்தார். கோலின் கிராண்ட் ஹோம் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 59.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இது பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை விட 67 ரன் கூடுதலாகும்.

    இந்திய வம்சாவளி வீரர் ஜீத்ராவல் அதிக பட்சமாக 55 ரன்னும், நிக்கோலஸ் 30 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ரகாத் அலி 4 விக்கெட்டும், முகமது அமீர், சோகைல்கான் தலா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    67 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை விளையாடியது. 64 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது.

    சமி அஸ்லம் 7 ரன்னில் கிராண்ட் ஹோம் பந்திலும், பாபர் ஆசாம் (29 ரன்), யூனுஸ்கான் (1 ரன்) ஆகியோர் வாக்னர் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    Next Story
    ×