என் மலர்

  செய்திகள்

  கஷ்டமில்லாமல் பலன் கிடைக்காது - பணமாற்றம் குறித்து மேரி கோம் கருத்து
  X

  கஷ்டமில்லாமல் பலன் கிடைக்காது - பணமாற்றம் குறித்து மேரி கோம் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசின் பண மாற்றம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கஷ்டப்படாமல் பலன் கிடைக்காது என்று முன்னாள் குத்துச் சண்டை வீரர் மேரி கோம் கருத்து தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

  இருப்பினும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றனர். வரவேற்பும் எதிர்ப்பும் கலந்ததாகவே இந்த நடவடிக்கை இருக்கிறது.

  மத்திய அரசின் பண மாற்றம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கஷ்டப்படாமல் பலன் கிடைக்காது என்று முன்னாள் குத்துச் சண்டை வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய மேரி கோம் கருத்து தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்த நடவடிக்கை இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரும் என்று நினைக்கிறேன். மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கலாம், ஆனால் அது சிறிது நாட்களுக்கு மட்டும் தான். கஷ்டப்படாமல் பலன் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×