என் மலர்
செய்திகள்

சீன ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற காலிறுதியில் சீனாவின் ஹி பி்ங்ஜியாவோவை சிந்து எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் பி.வி. சிந்து 22-20 என முதல் செட்டை கைப்பற்றினார்.
ஆனால் 2-வது செட்டை சிந்து 21-10 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 2-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Next Story