என் மலர்

    செய்திகள்

    டு பிளிசிஸ் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிப்பு: ஐ.சி.சி. அபராத நடவடிக்கை
    X

    டு பிளிசிஸ் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிப்பு: ஐ.சி.சி. அபராத நடவடிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஹோபர்ட் டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஐ.சி.சி. அவருக்கு அபராதம் விதிக்க உள்ளது.
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ஹோபர்ட் ஆடுகளம்  வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் பந்து தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தனது வாயில் ஒருவகையான இனிப்பு பொருளை வைத்துக் கொண்டு அதன் மூலம் பந்த சேதப்படுத்தினார்.

    இது டி.வி. ஒளிபரப்பின்போது தெளிவாக தெரிந்தது. ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் புகார் அளிக்காத வகையில் ஐ.சி.சி. அந்த டி.வி. காட்சியை ரீப்ளே செய்து பார்த்தது. அப்போது டு பிளிசிஸ் பந்தை சேதப்படுத்தியது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் ஐ.சி.சி.யின் நன்னடத்தை விதிமுறையை டு பிளிசிஸ் மீறியதாக ஐ.சி.சி. குற்றம்சாட்டியுள்ளது.

    ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி இந்த தவறுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது ஒரு போட்டியில் தடைபெறுவதற்கான இரண்டு புள்ளிகளை பெறலாம்.

    ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் டு பிளிசிஸ் மீது குற்றச்சாட்டை அறிவித்துள்ளார். போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் விசாரிக்க இருக்கிறார்.
    Next Story
    ×