என் மலர்

  செய்திகள்

  ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பெங்கால் ஆட்டம் டிரா
  X

  ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பெங்கால் ஆட்டம் டிரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - பெங்கால் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
  ராஜ்கோட் :

  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் முதலில் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.

  கே.விக்னேஷ் 30 ரன்னுடனும், நடராஜன் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 354 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கே.விக்னேஷ் 34 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

  17 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 77 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. பெங்கால் அணிக்கு ஒரு புள்ளி கிட்டியது.
  Next Story
  ×