என் மலர்
செய்திகள்

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார்.
ஹோபர்ட்:
கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புகின்றன. இலங்கை சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடரை (0-3) முழுமையாக இழந்தது.
சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்டில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துவிட்டது. அதிலும் 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்வில் 85 ரன்னுக்கு சுருண்டது. இது அந்நாட்டு ரசிகர்களை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் 24-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதி இல்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடைசி டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்கும். டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிச்சேல் ஸ்டார்க், ஹாசில்வுட் ஆகியோர் மட்டுமே அணியில் இடம் பெறுவது உறுதி. சிறந்த 11 பேர் கொண்ட அணியை பெற நாங்கள் உழைக்க வேண்டும்.
நாளை தொடங்கும் உள்ளூர் போட்டியான ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுகிறார்கள். அதில் ரன்கள் குவிப்பது, விக்கெட் எடுப்பதை அணி தேர்வு இருக்கும் அது அவர்களுக்கு மிக முக்கியம் என்றார்.

Next Story