என் மலர்
செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 348 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.
ராஜ்கோட் :
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய ஆடிய பெங்கால் அணி 337 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்தது. கேப்டன் அபினவ் முகுந்த் 19 ரன்னுடனும், கவுசிக் காந்தி 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நேற்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 80 ரன்னும், கவுசிக் காந்தி 65 ரன்னும் எடுத்தனர். கே.விக்னேஷ் 30 ரன்னுடனும், நடராஜன் 10 ரன்னுட னும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story