என் மலர்
செய்திகள்

டி.ஆர்.எஸ். முறைக்கு தெண்டுல்கர் வரவேற்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவை முன்னாள் பிரபல வீரர் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார்
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.) செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) இந்த முடிவை முன்னாள் பிரபல வீரர் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டி.ஆர்.எஸ்.முறையை பயன்படுத்துவது ஆக்க பூர்வமான நடவடிக்கையாகும். இந்த டி.ஆர்.எஸ்.முறை சரியாக இருந்தால் அதை நிரந்தரமாக பயன்படுத்துவது பற்றி கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






