என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி
    X

    நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி

    நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர்.
    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் அளவுகோலில் இது பதிவாகி இருந்தது. இதனால் அந்த நகர் பாதிப்புள்ளானது.

    இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். ஒட்டலில் தங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். 7-வது மாடியில் தங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோல அங்கு விளையாடி வரும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியும் பாதுகாப்பாக உள்ளது.

    இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக கிறிஸ்ட்சர்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி பாதிக்கப்படாது என்றும் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×